SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்டம் முழுவதும் திடீர் பனிப்பொழிவால் பரவுது காய்ச்சல்

11/8/2019 6:26:16 AM

சிவகாசி, நவ.8: மாவட்டம் முழுவதும் திடீர் பனிப்பொழிவு காரணமாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. தற்போது கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த பனிப்பொழிவு காரணமாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு மருத்துவமனை.  ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளித்தொந்தரவு, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமான முதியவர்கள், குழந்தைகள் வந்து செல்கின்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகலில் வெயில், இரவில் பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது.

இதுபோன்ற காரணத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வைரஸ் காய்ச்சல் எளிதில் பரவி வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிலவேம்பு கசாயத்தை வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில், ‘உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்து கிராமங்களிலும் நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்திட சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pslv_rocket111

    ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

  • sweeden_novbal1

    சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!

  • brazil_venom11

    நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்

  • canada_seaplanee1

    முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் :கனடாவில் அறிமுகம்

  • chinnaa_trainn11

    சீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை தொடக்கம் : வியக்கத்தக்க படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்