SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு

11/8/2019 6:25:31 AM

சிவகாசி, நவ.8: வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: படித்து முடித்து வேலை வாய்ப்பில்லாமல் இருப்பவர்களுக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.600 மாதந்தோறும் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை புதுப்பித்து வருபவர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலக உயிர்பதிவேடுகளில் காத்திருப்பவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எனில் 45 வயதுக்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். ஏற்கனவே வேறு எந்த நிதி உதவியும் பெறுபவர் மற்றும் இதே திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க கூடாது. கல்வி நிலையங்கள் செல்லும் மாணவ, மாணவிகளாக இருத்தல் கூடாது(தொலை தூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனு தாரர்களுக்கு இது பொருந்தாது). தகுதியுடையோர், அனைத்து கல்வி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்