வாரச்சந்தைக்கு அனுமதி மறுப்பால் விவசாயிகள் மறியல் போராட்டம்
11/8/2019 6:21:13 AM
தர்மபுரி, நவ.8: தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடப்பதால், வாரச்சந்தை கடை வைக்க அனுமதி வழங்காததை கண்டித்து வியாபாரிகள், விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் கல்வி, வேலை மற்றும் வெளியூர் செல்ல ஏரியூர் பஸ் நிறுத்தத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்தத்திற்கு தினசரி 20க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, அரசு சார்பில் ₹3.10 கோடி மதிப்பில், ஏரியூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பஸ் நிலையம் அமைய உள்ள பகுதியில், சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தனர். அந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று நேற்று முன்தினம் ஒப்பந்ததாரர்கள் கூறினர். இதை கண்டித்து வியாபாரிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை அகற்றினர்.
இந்த பஸ் நிறுத்தம் அருகே வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும். வழக்கம்போல் நேற்று வாரச்சந்தை கூடும் என நினைத்து விவசாயிகள், வியாபாரிகள் திரண்டனர். விற்பனைக்காக காய்கறிகள், மளிகை சாமான்கள், பழ வகைகள் கொண்டு வந்திருந்தனர். வாரச்சந்தையில் கடை போட அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது ஏரியூர் பஸ்நிலையம் அமைக்கும்பணி நடக்கிறது. அதனால் வாரச்சந்தை கடைகள் அமைக்க இடம் வழங்கப்படாது. அடுத்தவாரம் வாரசந்தைக்கான கடைகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து தரப்படும். வெளியூரில் இருந்து வந்த விவசாயிகள், வியாபாரிகள் அங்கு காலியாக இருந்த இடத்தில் கடைகள் போட்டுக்கொள்ள அனுமதி அளித்தனர். அதன்பின் கலைந்து ெசன்றனர். பொருட்கள் கொண்டு வந்திருந்த சிறு வியாபாரிகள், விவசாயிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
கடத்தூர் பகுதியில் சாலையோரம் கட்டி வைக்கப்படும் கால்நடைகளால் விபத்து அபாயம்
பச்சமுத்து நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா
கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வாத்தியார் கொட்டாய் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம்
தர்மபுரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
அரூர் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தல்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்
தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து