கரூர் பகுதியில் விபத்து ஏற்படும் வகையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள்
11/8/2019 5:52:30 AM
கரூர், நவ. 8: அதிக பாரம் ஏற்றி விபத்து ஏற்படும் வகையில் வேன்கள் செல்கின்றன.கரூர் பகுதியில் சரக்கு வேன்களில் அதிக அளவில் பாரம் ஏற்றி செலகின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் பாரம் ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பின்னால் வரும் வாகனங்கள் முந்திசெல்வதில் பிரச்னை ஏற்படுகிறது. சாலையின் வளைவுகளில் எதிர்த் திசையில் வாகனங்கள் வருவது தெரியாமல் ஓட்டுனர்கள் தடுமாற்றம் அடைகின்றனர்.மேலும் சரக்கு வேன்கள் பாரம் இறக்கிவிட்டு வரும்போது அதிக வேகத்தில் வருகின்றன. அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் செய்திகள்
வாக்காளருக்கு லஞ்சமோ, வெகுமதியோ கொடுக்க கூடாது
தோகைமலை ஒன்றியம் பொருந்தலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு சத்யா வேட்பு மனு தாக்கல்
கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் க.பரமத்தி ஒன்றியத்தில் மொத்தம் 69 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி ஆண்களை விட பெண்கள் அதிகம்
வாக்குச்சாவடி மையத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு மணக்காட்டு நாயக்கனூர் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் பிசி, எம்பிசி, எஸ்டி மாணவர்களுக்கு உதவி தொகை விண்ணப்பிக்க அழைப்பு
2வது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் செல்லாண்டிபாளையம் அருகில் தடுப்பு சுவர் அகற்றப்பட்ட இடத்தில் பொக்லைன் மூலம் சாலை சீரமைப்பு