SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் அரசு கண்டுகொள்ளாததால் விவசாயிகள் கடும் அதிருப்தி

11/8/2019 5:52:04 AM

கரூர், நவ. 8: வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை அரசு கண்டுகொள்ளாததால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.கரூர் மாவட்டம் வெள்ளியணையில் பாசனக்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. மழையின்மையால் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக குளத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் வரவில்லை. தொடர்ந்து வறட்சி, மழையின்மை காரணமாக மக்கள் குடிநீருக்கே சிரமப்படுகின்றனர். கர்நாடக பெருவெள்ளம் காரணமாக 3 மாதத்திற்கு முன்னர் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டுஓடியது. உபரிநீரை பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தாததால் குளத்திற்கு தண்ணீர் வரவில்லை.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வெள்ளியணை பெரியகுளத்திற்கு குடகனாற்றில் இருந்து தண்ணீர் வரும். கடந்த 5 ஆண்டுகளாக மழையின்மை காரணமாக குளத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் வரவில்லை. பிற பகுதிகளில் மழைபெய்தும் குடகனாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் கரூர் மாவட்ட எல்லையிலும் குடகனாறு அணை உள்ளது. காவிரியில் உபரிநீர் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு எங்கள் ஊர்வழியாக குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டுசெல்கின்றனர்.

பிற ஊர்களுக்கு நீர்கொண்டு செல்லும்போது அருகிலேயே உள்ள வெள்ளியணைக்கு தண்ணீரை கொண்டு வர திட்டம் செயல்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். காவிரியாற்றில் இருந்து 17 கிமீ உள்ளது வெள்ளியணை பெரியகுளம். ராட்சத குழாய்களை அமைத்து உபரிநீர் வரும் காலங்களில் நீர்உந்து செய்யப்பட்டு குளத்தை அடையுமாறு திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாம். பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.தற்போது மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 54 ஆயிரம் கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த நீரை முழுமையாக பயன்படுத்த முடியாமல் கொள்ளிடம் வழியாக வீணாக போய்க்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. மாயனூரில் இருந்து வெள்ளியணை 17கிமீ தூரத்தில் தான் உள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பாசனத்திற்கும் நீர்கிடைக்கும். நீராதாரமும் பெருகும். நீர் ஆதாரத்தை பெருக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் 450 ஏக்கர் பரப்பரளவு வேளாண்நிலங்கள் பயனடையும். 10 ஆயிரம் விவசாய குடும்பத்தினர் பயனடைவார்கள். வெள்ளியணை, ஜெகதாபி, பொரணி, உப்பிடமங்கலம், சேங்கல், காணியாளம்பட்டி, பஞ்சப்பட்டி, வடகம்பாடி, முத்தம்பட்டி, குமாரபாளையம்,.செல்லாண்டிபட்டி, மணவாடி, கத்தாளப்பட்டி போன்ற ஊர்கள் உள்ளிட்ட அய்யர்மலை விவசாயிகள் பயனடைவார்கள். போர்க்கால அடிப்படையில் குளத்திற்கு தண்ணீர் கொண்டுவரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீர்மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் சுணக்கம்காட்டி வருவது பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்