கோவை மாநகராட்சியை கண்டித்து 20ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்
11/8/2019 5:32:54 AM
கோவை, நவ. 8: கோவை மாநகராட்சியை கண்டித்து வரும் 20ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கார்த்திக் எம்எல்ஏ கூறினார்.
கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சி நிர்வாகம் 100 சதவீத சொத்து வரி உயர்வை அமுல்படுத்தியுள்ளது. மேலும், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வினியோக உரிமையை பிரான்ஸ் நாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு 26 ஆண்டு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதன்மூலம், ேகாவை மாநகர மக்கள் மீது அளவுக்கு அதிகமான வரிச்சுமையை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றியுள்ளது. அத்துடன், மாநகரில் குப்பை அகற்றுதல், தெருவிளக்கு பராமரிப்பு, மழைநீர் வடிகால்-சாக்கடை கால்வாய் தூர்வாருதல் என பராமரிப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுகிறது.
இதை கண்டித்து, திமுக சார்பிலும், திமுக கூட்டணி கட்சிகள் சார்பிலும் பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்க மறுக்கிறது. தொடர்ந்து அலட்சிய போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வரி உயர்வை வாபஸ் பெறக்கோரியும், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தால், தடையை மீறி இப்போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கார்த்திக் எம்எல்ஏ கூறினார்.
முன்னதாக நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட திமுக பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, குப்புசாமி, குமரேசன், உமாமகேஸ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர் மெட்டல் கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், மகுடபதி, தீபா, ராஜ ராஜேஸ்வரி பாபு, தீர்மானக்குழு உறுப்பினர் செல்வராஜ், பகுதி கழக செயலாளர்கள் கோவை லோகு, எஸ்.எம்.சாமி, வடவள்ளி சண்முகசுந்தரம், சேதுராமன், கோவிந்தராஜ், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்
கோவையில் 3 மாடி கட்டிடத்தில் ‘திடீர்’ தீ விபத்து
மழைக்கு ஓழுகும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் அன்னூர்,டிச.5: கோவை மாவட்டம் அன்னூர், நல்லிசெட்டிபாளையத்தில்
மாநகராட்சி பணிகளில் வெளிநபர் தலையிட அனுமதி அளிக்கக்கூடாது
சவுத் இந்தியா பின்வெஸ்ட் நிதி நிறுவனம் ரூ.100 கோடி வர்த்தக இலக்கை எட்டி சாதனை
தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்
தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து