திருவாரூரில் நாளை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
11/7/2019 12:28:54 AM
திருவாரூர், நவ.7: திருவாரூரில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து அதிமுகவின் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நாளை (8ம்தேதி) நடைபெறுகிறது. திருவாரூர் ஆரூரான் திருமண மண்டபத்தில் மாலை 4 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் அருணாசலம் தலைமை வைக்கிறார். அமைப்பு செயலாளர் முன்னாள் எம்பி கோபால் முன்னிலை வகிக்கிறார். இதில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தும் நூறு சதவிகித வெற்றியை பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதால் மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர ,பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், பேரவை நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காமராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கோபுரங்களை ஆக்கிரமித்த செடிகள் அகற்றப்படுமா?
4 நாட்களில் 563 பேர் வேட்புமனு தாக்கல்
சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி
வடக்கு கொத்த தெரு சாலை சீரமைக்கும் பணி மும்முரம்
முத்துப்பேட்டை அருகே அடிப்படை வசதிக்காக பல ஆண்டுகளாக தவிக்கும் மக்கள்
ஆள்காட்டுவெளி அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா