SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு

10/25/2019 3:46:26 AM

கிருஷ்ணகிரி, அக்.25: கிருஷ்ணகிரியில் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்து, பொதுமக்களிடம் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, தீ விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அப்போது அவர் பேசுகையில், பட்டாசுகளை கையில் வைத்து கொண்டு வெடிக்க கூடாது. சிறுவர், சிறுமியர்களிடம் பட்டாசு மற்றும் மத்தாப்புக்களை வெடிக்கும்போது பெரியவர்கள் முன்னிலையில் வெடிக்கச் செய்ய வேண்டும். குழந்தைகளிடம் தீக்குச்சிகள், மத்தாப்பு பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை கொடுக்க கூடாது. வீட்டிற்குள் பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது. மிகவும் தளர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு, மத்தாப்பூ கொளுத்தக் கூடாது. பட்டாசுகளை கண்ணாடி பாட்டில்கள் மற்றும் தகர டப்பாக்களை கொண்டு மூடி வெடிக்கக் கூடாது. சமையலறையில் பட்டாசுக்களை வைத்தல் கூடாது.

பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் தீக்காயங்களுக்கு குளிர்ந்த நீரை தீக்காயத்தின் மீது உடனடியாக ஊற்ற வேண்டும். குழந்தைகளை விளக்கில் பட்டாசுக்களை கொளுத்த அனுமதிக்க கூடாது.  வெடிக்கும் அபாயம் கொண்ட வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் கையில் எடுக்கக் கூடாது. பட்டாசுகளையும், மத்தாப்புகளையும் கூரை வீடுகள், மக்கள் நெருக்கமுள்ள இடங்களிலும், பெட்ரோல் பங்க், கேஸ் சிலிண்டர்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் ஆகிய இடங்களில் வெடிக்க கூடாது. பட்டாசு வெடிக்கும் போது குனிந்து கொண்டு, முகத்தின் எதிரே வைத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மேலும், எதிர்பாராத விதமாக ஆடைகள் மீது தீப்பற்றினால் அங்கும், இங்கும் ஓடாமல், தண்ணீரை ஊற்றி அணைக்கலாம் அல்லது தரையில் படுத்து உருள வேண்டும். இந்த அறிவுரைகளை பின்பற்றி விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சேது, நிலைய அலுவலர் மாது மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்