விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
10/23/2019 12:25:43 AM
காட்டுமன்னார்கோவில், அக். 23: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் குமராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் செல்வகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சி அரசூர் ஆதிதிராவிட மக்கள் கறவை மாடுகள் வாங்குவதற்கென வங்கிக் கடன் கேட்டு கூட்டுறவு வங்கி தலைவர், மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து வரும் 5ம்தேதி குமராட்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அத்துடன் தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ரேஷன் கடையை தினமும் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செய்திகள்
விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியில் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டும் அவலம்
அண்ணனை மண்வெட்டியால் தாக்கிய தம்பி கைது
நெய்வேலியில் தகராறை தட்டிக் கேட்ட 3 பேருக்கு கத்தி வெட்டு
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் விருத்தாசலம் அரசு கலைக்கல்லூரி தேர்வு
விவசாயிகள் கவலை வெலிங்டன் நீர்த்தேக்க கரைப்பகுதியில் கசிவு
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்
முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் :கனடாவில் அறிமுகம்
சீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை தொடக்கம் : வியக்கத்தக்க படங்கள்