SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோல்வியில் வெற்றியை கண்டால் உங்கள் வாழ்வும் பிரகாசமாகும் என இப்போது புரிகிறதா? இன்று தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு நாள் ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் ஊரக வளர்ச்சித் துறை நிர்வாக குளறுபடி

10/18/2019 1:26:57 AM

தேனி, அக். 18: தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை நிர்வாக குளறுபடியால் ஊராட்சி மன்றங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் சேர்த்து 130 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.ஊராட்சி மன்றங்களில் பணிபுரியும் செயலர்கள், எழுத்தர்கள், துப்புரவுப்பணியாளர்கள், தண்ணீர் மேல்நிலைத்தொட்டி திறப்பாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஊராட்சிக்கான பொதுநிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். இதுதவிர ஊராட்சிகளில் சாலைபராமரிப்பு, தெருக்குழாய் பராமரிப்பு, தெருமின்விளக்கு பராமரிப்பு, சுடுகாடு பராமரிப்பு, பொதுச்சுகாதார பராமரிப்பு போன்ற பணிக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் ஈடுபடுவோருக்கு ஊராட்சி நிர்வாகம் ஊராட்சி பொதுநிதியில் இருந்து காசோலையாக பணத்தை வழங்குவது வழக்கம்.இந்த நிலையில் தமிழக அரசு இத்தகைய செலவினங்களை செலவளிக்க காசோலையை பயன்படுத்தக்கூடாது. பொதுநிதி பராமரிப்பு முறை எனக்கூடிய பிஎப்எம்எஸ் என்ற முறையில் அனைத்து பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்கு உரியவரின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்த வேண்டும் என கடந்த மாதம் உத்தரவிட்டது. இத்திட்ட செயல்முறை குறித்து உரிய திட்டமிடலோ,விழிப்புணர்வோ ஊராட்சி நிர்வாகத்தில் இல்லாததால், தமிழகம் முழுவதும் இம்முறை கைவிடப்பட்டு பழைய முறையே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தேனி மாவட்டத்தில் மட்டும் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் தீபாவளி அட்வான்ஸ் தொகை மட்டும் ஊராட்சி பொதுநிதியில் இருந்து வழங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, தெருவிளக்கு, பொதுகுடிநீர் குழாய், பொதுச்சுகாதார பராமரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ள அனுமதிக்காத நிலை உள்ளது.

தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாதவகையில் தேனி மாவட்டத்தில் மட்டும் சம்பளம், அட்வான்ஸ் தவிர வேறு எந்த செலவும் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதால், தேனி மாவட்ட ஊராட்சிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவோ, சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளவோ முடியாமல் ஊராட்சி மன்ற நிர்வாகங்கள் திணறி வருகின்றன.தற்போது மழைகாலம் துவங்கியுள்ளதால் சாலைபராமரிப்பு, கழிவுநீர் ஓடைபராமரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு, பொதுச்சுகாதார பராமரிப்பு போன்றவை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நிர்வாக குளறுபடியால், இப்பணிகளை மேற்கொள்ள முடியாமல் ஊராட்சிகள் திணறி வருகின்றன.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு, தமிழ்நாடு முழுவதும் ஊரகவளர்ச்சித் துறையில் கடைபிடிக்கப்படும் முறையினை, தேனி மாவட்டத்திலும் கடைபிடிக்க உத்தரவிட வேண்டும் என பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pslv_rocket111

  ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

 • sweeden_novbal1

  சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!

 • brazil_venom11

  நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்

 • canada_seaplanee1

  முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் :கனடாவில் அறிமுகம்

 • chinnaa_trainn11

  சீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை தொடக்கம் : வியக்கத்தக்க படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்