துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம்
10/17/2019 12:06:46 AM
கடலூர், அக். 17: கடலூர் பெருநகராட்சி நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துப்புரவு பணியாளர்கள் நேற்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.கடலூர் பெரு நகராட்சியில் 230 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக கடும் நிதி நெருக்கடியில் உள்ள நகராட்சி நிர்வாகத்தால் துப்புரவு பணியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் உரிய காலத்தில் வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க முடியவில்லை. 25 ஆண்டுகள் பணியாற்றி பணிமுடித்த 21 துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அரசு வெகுமதி மற்றும் மூன்றாண்டுகளாக நிலுவை தொகை ரூ.42 ஆயிரம் வழங்கப்படவில்லை. பணியாளர்கள் சொசைட்டிக்கு கட்ட வேண்டிய தொகை ரூ.2 கோடியை நகராட்சி நிர்வாகம் கட்டாமல் உள்ளது. சம்பளத்தில் பிடிக்கப்பட்ட ஜிபிஎப் மாத தவணை மற்றும் கடன் தொகை பிடித்தம் ஜிபிஎப் கணக்கில் காட்டாமல் இரண்டாண்டுகளாக ரூ.3.2 கோடி நிலுவை தொகை வைத்துள்ளது. ஜிபிஎப் வட்டி பணம் ஜிபிஎப் கணக்கில் சேர்க்காமல் பத்தாண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்ற 6 தொழிலாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் மற்றும் சிறப்பு வருங்கால வைப்புநிதி மற்றும் பணிக்கொடை திட்டத்தின் மூலம் ரூ.17 லட்சம் வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும், நேரில் முறையிட்டும் தங்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்குமாறு கோரினர். ஆனால் இதுவரை நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தென்னாற்காடு மாவட்ட நகராட்சி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பக்கிரி தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் அரசகுமரன், துணை தலைவர்கள் ஆனந்த், காசிநாதன், பாண்டுரங்கன், இணைச்செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின் போது, நகராட்சி ஆணையர் பொறுப்பு டாக்டர் அரவிந்த்ஜோதி இல்லாததால் அவரை நேரில் சந்தித்து மனு கொடுத்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க இயலாமல் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.போராட்டம் நடத்திய துப்புரவு பணியாளர்கள் கூறுகையில், தீபாவளி முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தீபாவளிக்கு முன்பாக வழக்கமாக அக்டோபர் மாதத்தில் வழங்கப்படும் ஜி.பி.எப் வைப்பு நிதி கடன் ரூ.2 கோடியை துப்புரவு பணியாளர்களுக்கு உடனயாக வழங்க வேண்டும். 2019ம் ஆண்டிற்கு சீருடை மற்றும் தையல் கூலியாக ரூ.6 லட்சம் வழங்க வேண்டும். எங்களின் இந்த கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் தொடர்போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.
மேலும் செய்திகள்
ஊராட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் வேட்பு மனு தாக்கல்
விபத்தில் வாலிபர் பலி
பள்ளி மாணவர்களுக்கு வாசிக்கும் திறனை மேம்படுத்தும் பயிற்சி
பல்கலை மாணவி தற்கொலை வழக்கில் காதலன் அதிரடி கைது
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை பொதுமக்கள் கட்ட வேண்டும்
காதலித்து திருமணம் செய்த மனைவி கடத்தல்
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்
சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்!!