குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்க வலியுறுத்தல்
10/1/2019 5:49:09 AM
ஈரோடு, அக். 1: குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்யக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர்.மொடக்குறிச்சி சின்னியம்பாளையம் எம்ஜிஆர்., நகரில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் மனை எதுவும் இல்லை. இந்நிலையில் சின்னியம்பாளையத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் சுமார் 96 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த வீடுகளில் தங்களுக்கும் வீடு ஒதுக்க வேண்டும் என எம்ஜிஆர்., நகர் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமானோர் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 14 ஒன்றியங்களில் 9.08 லட்சம் வாக்காளர்கள்
சிறுமி பாலியல் பலாத்காரம் டிரைவர் போக்சோவில் கைது
போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,184 வழக்கு பதிவு
14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்
மாநகராட்சி பகுதியில் தரமான சாலை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை
மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்