SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் கணினி இயக்குபவர் பதவிக்கான தேர்வு ரத்து

9/24/2019 12:08:31 AM

திருவள்ளூர், செப்.24: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் காலியாக உள்ள 111 கணினி இயக்குபவர் பதவிக்கான தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மீனாட்சி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் காலியாக உள்ள 111 கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, 15.10.2018 அன்று இணையதளம் மற்றும் நாளிதழ்கள் வாயிலாக அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு 08.09.2019 அன்று சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது. தற்போது மேற்காணும் எழுத்து தேர்வு முடிவுகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. தேர்வு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்