கல்லூரி முன் சாலை மறியல் 2 பேர் கைது
9/20/2019 5:30:34 AM
தர்மபுரி, செப். 20: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரி முன் நேற்று முன்தினம் இளைஞர் முன்னணியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், வகுப்பை புறக்கணித்து மறியலில் ஈடுபடுவதாக நினைத்த பேராசிரியர்கள், கல்லூரி முன் திரண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் இளைஞர் முன்னணியினர் என அறிந்த பேராசிரியர்கள், இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார், இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அன்பு (24) உள்பட 2பேரை கைது செய்தனர். மேலும் மறியலில் ஈடுபட்ட சிலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
உள்ளாட்சி தேர்தலுக்கு முதல்நாளில் 107 பேர் வேட்புமனு தாக்கல்
அரூர் பகுதியில் சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்
குண்டும், குழியுமாக மாறிய ரயில்வே ஸ்டேஷன் சாலை
மின்இணைப்பு வழங்காததால் ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் விநியோகம் இல்லை
பாலக்கோடு பேரூராட்சியில் வார்டு வரையறையில் குளறுபடி
விபத்தில் தொழிலாளி பரிதாப பலி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்