SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நட்சத்திர ஓட்டல், மாணவர்களை குறிவைத்து கோகைன் விற்பனை,..உகாண்டா நாட்டு மாணவி, நைஜீரிய வாலிபர் கைது

9/20/2019 12:25:19 AM


சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகள், பங்களாக்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கோகைன் விற்பனை செய்யப்படுவதாக சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த மாதம் எழும்பூரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி நடைபெற்ற மது விருந்தின் போது, கோகைன் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த ஒருவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் நுண்ணறிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. நீலாங்கரை அகே உள்ள அக்கரை பகுதியில் வசித்து வரும் உகாண்டாவை சேர்ந்த பெண்ணிடம் போதை பொருள் வாங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதைதொடர்ந்து உகாண்டா பெண்ணிடம் போதை பொருள் வாங்குவது போல் தொடர்பு கொண்டு, கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: உகாண்டா நாட்டை சேர்ந்த கக்கூசா ஸ்டெல்லா (26). பேஷன் டெக்னாலஜி படிக்க கடந்த 2014ம் ஆண்டு பெங்களூரு வந்தார். படிப்பு முடிந்த உடன் அவர் பெங்களூருவிலேயே தங்கி இருந்தார். மாணவர் விசா முடிந்ததால் அவரை பெங்களூரு போலீசார் கடந்த 2017ம் ஆண்டு கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த கக்கூசா ஸ்டெல்லா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை பகுதியில் வீடு எடுத்து தங்கி இருதுள்ளார். அப்போது நட்சத்திர ஓட்டலில் இரவு விருந்தின் போது நைஜீரிய நாட்டை சேர்ந்த அஜ்ஜூ காட்வின் சுக்வு (39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் கோகைன் போன்ற போதை பொருள் அவருக்கு சுலபமாக கிடைத்துள்ளது.

கோகைன் போதை பொருளை அஜ்ஜூ காட்வின் சுக்வு தமிழக கல்லூரிகளில் படித்து வரும் வெளிநாட்டு மாணவ, மாணவிகள் மூலம் மும்பை வழியாக கொண்டு வருவது தெரியவந்தது. கடைசியாக கடந்த பிப்ரவரி 2ம் தேதி பைக்கில் ₹3 லட்சம் மதிப்புள்ள கோகைன் கடத்திய ெசன்றபோது அஜ்ஜூ காட்வின் சுக்வு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அஜ்ஜூ காட்வின் சுக்வின் வாடிக்கையாளர்களை மாணவி கக்கூசா ஸ்டெல்லா தன் வசப்படுத்தி கொண்டார். இதனால் அவர் சொந்த நாட்டிற்கு செல்லாமல் சென்னையிலேயே தங்கி இருந்துள்ளார். கோவா, மும்பையில் தங்கி படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கோகைன் போதை பொருளை சென்னைக்கு கொண்டு வந்த கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவன ஊழியர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவ்வாறு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் கக்கூசா ஸ்டெல்லா கொடுத்த தகவலின்படி புதுச்சேரி மாநிலம் ஆரோவில் பகுதியில் பதுங்கி இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த அஜ்ஜூ காட்வின் சுக்வியை ேநற்று முன்தினம் கைது செய்தனர். அவனிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gujarath_111

  குஜராத் மாநிலம் சூரத்தில் 10 மாடிகள் கொண்ட ஜவுளி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

 • srilankaa_twinnss1

  இலங்கையில் உலக சாதனை நிகழ்ச்சியாக அதிக இரட்டையர்கள் ஒன்று கூடிய மாபெரும் நிகழ்வின் மெய்சிலிர்ப்பூட்டும் படங்கள்

 • iyesu_kudaamuu1

  இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

 • nirmalaa_alawaa1

  டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

 • telanagana_leopardd1

  தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்