அமைச்சர் காமராஜ் பேச்சு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் கண்டித்து ஆளுநர் மாளிகையை 28ல் முற்றுகை கூத்தாநல்லூரில் இருந்து 100 பேர் பங்கேற்பு இளைஞர் பெருமன்ற கூட்டத்தில் முடிவு
9/20/2019 12:12:16 AM
மன்னார்குடி, செப். 20: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதை கண்டித்து செப்டம்பர் 28 ல் சென்னை ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் அறிவித்துள்ளது.அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் நகரக்குழு கூட்டம் கூத்தாநல் லூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் விக்னேஷ் தலைமை வகித்தார். நகர செயலாளர் பிச்சமுத்து முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் சுதர்சன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதை கண்டித்து செப்டம்பர் 28 ல் சென்னை ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு நடை பெறவுள்ள போராட்டத்தில் கூத்தாநல்லூர் நகர குழு சார்பில் 100 பேர்பங்கேற்பது, கூத்தாநல்லூர் அரசு வட்ட மருத்துவமனை 24 மணி நேரமும் முழு நேர பணி மருத்துவர்களை கொண்டு இயக்கிட வேண்டும், எக்ஸ்ரே, இஜிசி, ரத்தப் பரிசோதனை ஆகியவற்றை முழுநேரமும் இயக்கிட வேண்டும், கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் பள்ளிக்கு நிகராக மாணவிகளிடம் கட்டணம் வாங்கும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.முன்னதாக பாநெப்போலியன் வரவேற்றார். முடிவில் பகத்சிங் நன்றி கூறி னார்.
மேலும் செய்திகள்
முத்துப்பேட்டை ஜமாலியா தெரு சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் கடும் அவதி
தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தல் பாலியல் குற்ற அறிக்கைகளை மருத்துவர்கள் எளிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும்
அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள்நாளைக்குள் ஆதாரை இணைக்கவும்
விவசாயிகள் வலியுறுத்தல் முத்துப்பேட்டை தர்கா நிர்வாகம் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு
பயிர் இழப்பீடு தொகை வழங்க கோரி18ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டியில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா பயிரை காப்பாற்ற வேண்டும்
விவசாயிகள் சங்கம் அறிவிப்பு வலங்கைமான் ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெட்டவெளியில் கிடந்த இரும்பு கம்பிகள் அகற்றம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்