பொன்னமராவதி பகுதிகளில் ஒரேநாளில் 3 பள்ளிவாசல்களில் மின்சாதன பொருட்கள் திருட்டு
9/20/2019 12:09:42 AM
பொன்னமராவதி.செப்.20: பொன்னமராவதி பகுதிகளில் உள்ள மூன்று பள்ளிவாசல்களில் ஒரே நாளில் மின்சாதன பொருட்கள் மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருக்களம்பூரில் உள்ள பள்ளிவாசலில் உள்ள ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு ஆம்பிளிபயர், வேந்தன்பட்டியில் உள்ள பள்ளிவாசலில் ரூ.ஏழாயிரம் மதிப்புள்ள ஆம்பிளிபயர், பொன்னமராவதி பெருமாள் கோவில் வீதியில் உள்ள பள்ளிவாசலில் 11 பித்தளை தண்ணீர் பைப் என ஒரே நாளில் மூன்று பள்ளிவாசல்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது தொடர்பாக பொன்னமராவதி போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இதே போல் இரண்டு மாதங்களுக்கு முன் பொன்னமராவதி அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மருதிபட்டி, செல்லியம்பட்டி, கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களின் ஆம்பிபயர் திருட்டு போயுள்ளன. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீசார் கூறுகையில்- திருடிய நபர் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஒரே வாலிபர் என தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத அந்த வாலிபரை தேடி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
விவசாயிகள் சங்கம் கோரிக்கை சர்வதேச தொண்டர்கள் தின விழா
வேட்பு மனுதாக்கல் துவக்கம் பயிர் காப்பீடு செய்ய டிச.25 வரை கால அவகாசம்
அதிகாரிகள் அதிரடி ஆய்வு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27, 30ம் தேதி 2 கட்டமாக வாக்குப்பதிவு
புதுக்கோட்டை நகர பகுதிகளில் வெங்காய மூட்டைகள் பதுக்கலா?
அறந்தாங்கி அருகே லாரியில் மணல் கடத்தியவர் கைது
முன்னாள் ஒன்றிய சேர்மன் மனைவி வேந்தன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்