SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்கூரையிலிருந்து தவறி விழுந்து மத்திய பிரதேச வாலிபர் சாவு

9/20/2019 12:09:27 AM

புதுச்சேரி,  செப். 20:   புதுவையில் வேலை செய்யும் தந்தையை பார்க்க வந்த மத்திய பிரதேச  வாலிபர், மழைநீர் ஒழுகியதை தடுக்க மேற்கூரையில் ஏறியபோது தவறி விழுந்து  பரிதாபமாக இறந்தார்.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் சலிம்கான் (50). 7  வருடங்களுக்கு முன்பு தனியாக புதுச்சேரி வந்த இவர் முதலியார்பேட்டை 100  அடி ரோட்டில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் தங்கி வேலை செய்து வருகிறார். 2  வாரங்களுக்கு முன்பு தந்தையை பார்ப்பதற்காக மத்திய பிரதேசத்தில் இருந்து  அவரது மகன் சயித்கான் (19) புதுச்சேரி வந்துள்ளார். சில நாட்களாக  புதுச்சேரியில் மழை பெய்த நிலையில் சலிம்கான் தங்கியுள்ள வீட்டின் மேற்கூரை  சேதமடைந்து நீர் ஒழுகியுள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று அதன் மீது  சலிம்கான் ஏறி சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தந்தைக்கு  உதவி செய்யும் நோக்கில் சயித்கானும் கூரை மீது ஏறிய நிலையில், அவர்  தடுத்துள்ளார்.

 ஆனால் தந்தையின் சொல்லை கேட்காமல் மேற்கூரையில் ஏறிய  சயித்கான் எதிர்பாராதவிதமாக கூரையில் இருந்து வழுக்கி கீழே விழுந்துள்ளார்.  இதில் தலையில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சயித்கான் இன்று காலை பரிதாபமாக  இறந்தார். இதுகுறித்து முதலியார்பேட்டை எஸ்ஐ வீரபத்திரசாமி தலைமையிலான  போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்