SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விராலிமலை முருகன் கோயிலில் பக்தர்களுக்கு தெரியாமல் உண்டியல் பணத்தை எடுத்து சென்றதால் அதிருப்தி

9/20/2019 12:09:21 AM

விராலிமலை, செப் 20: விராலிமலை முருகன் கோயில் தீ பற்றி எறிந்த உண்டியலில் இருந்த பணத்தை நேற்று முன்தினம் இரவு கோயில் அதிகாரிகள் பக்தர்களுக்கு தெரியாமல் கொண்டு சென்றது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.விராலிமலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயில் விஷேச காலங்களில் ஆயிரக்கணக்கானோரும், தினமும் திரளான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் மலைமேல் கோயில் சந்நதியிலும், மலையடி வாரத்தில் விநாயகர் கோயில் அருகேயும், ஆதி முருகன் சந்நதி அருகேயும் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை கோயில் அதிகாரிகள் பக்தர்கள் முன்னிலையில் திறந்து காணிக்கை எண்ணுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோயில் அடிவாரத்தில் விநாயகர் சந்நதி அருகே உள்ள உண்டியலில் புகை கிளம்பியுள்ளது. இதை பார்த்து அதிச்சி அடைந்த பக்தர்கள் உண்டியலில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுகுறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடைபெற்று சில தினங்கள் ஆவதாலும், இரவு நேரத்தில் பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் கோயில் அதிகாரிகள் உண்டியலை திறந்து பணத்தை எடுத்து சென்ற சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • deepam 9 fest

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.

  • 10-12-2019

    10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hongkiong_1211

    அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • northesat_masothaa1

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்

  • dragon_shapes_chinaa1

    40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்