SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உதிரிபாக கடையின் பூட்டை உடைத்து 3 லட்சம் காப்பர் திருடிய 3 பேர் கைது

9/19/2019 12:04:39 AM

சென்னை: உதிரிபாக கடையின் பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்புள்ள காப்பர் திருடி சென்ற 3 கொள்ளையர்களை போலீசார் சிசிடிவி பதிவு மூலம் கைது செய்தனர்.சென்னை அண்ணாசாலை பார்டர் தோட்டம் பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உதிரிபாக விற்பனை கடை உள்ளது. இதன் உரிமையாளர் சிக்கந்தர் (30).கடந்த 16ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். பிறகு மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே சிக்கந்தர் கடைக்குள் சென்று பார்த்த போது ₹3 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகள் மாயமாகி இருந்தது.இதுகுறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் சிக்கந்தகர் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தனர். அப்போது, பழைய குற்றவாளியான சேத்துப்பட்டு பகுதியை ேசர்ந்த அண்ணாமலை, தீபக், ரமேஷ் ஆகியோர் திருடி ெசன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் ேநற்று கைது செய்துனர்.
} புளியந்தோப்பு ராமசாமி தெருவை சேர்ந்தவர் ஜான்பாஷா (29). ஆட்டோ டிரைவர். கடந்த 13ம் தேதி இரவு, தனது ஆட்டோவை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது ஆட்டோவின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சிதறியிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். இப்புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புளியந்தோப்பு, டி.எஸ்.மூர்த்தி தெருவை சேர்ந்த சிவா (எ) சொறி சிவா (23), பாடிசன் தெருவை சேர்ந்த குட்டி (எ) தமிழ்வாணன் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

} மாதவரம், பொன்னியம்மன்மேடு, ஐயர்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன் (40). இவரது மனைவி பிரியா (36). தம்பதிக்கு சிவனேஷ் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் சாமிநாதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும், இதை தட்டிக்கேட்ட பிரியாவை வரதட்சணை கேட்டு சுவாமிநாதன் கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான தகராறில் மனமுடைந்த பிரியா  நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதற்கிடையே பிரியாவின் தாய் சாந்தி  மாதவரம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில்  தனது மருமகன் சாமிநாதன் வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக தன்னுடைய மகள் பிரியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். அதனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டார். எனவே தனது மகள் சாவுக்கு அவரது கணவர்தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் சாமிநாதனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.} தி.நகர் எஸ்.எஸ்.புரம் தேவி முத்து மாரியம்மன் கோயிலில் ேநற்று முன்தினம் இரவு தர்மகத்தா ஆனந்த் (43) பூஜை முடிந்ததும் பொதுமக்கள் வழிபாடுக்காக விட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இரவு 9 மணி அளவில் கோயிலுக்கு வந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த இரண்டரை சவரன் தாலி மாயமாகி இருந்தது. புகாரின்பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* கோயம்பேட்டில் பெட்டிக்கடை நடத்தும் சாந்தி (42) என்ற பெண்ணின் முகத்தை அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தும் அழகிரி (33) என்பவர் தொழில் போட்டி தகராறில் பிளேடால் கிழித்தார். கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அழகிரியை கைது செய்தனர்.
* அரும்பாக்கம் சுடுகாட்டில் வேலை செய்யும் அரும்பாக்கம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த காங்கு (எ) கார்த்திக் (20) என்பவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கோகுல் (23), ஜெகன் (25), திருமங்கலம் அண்ணா தெருவை சேர்ந்த விக்னேஷ் (24) ஆகிய 3 பேருடன் சுடுகாட்டில் மது அருந்தியுள்ளார்.
அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் கோகுல், ஜெகன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கார்த்திக்கை பீர்பாட்டில் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் பிடித்து விசாரிக்கின்றனர்.
* திருவெற்றியூர் விம்கோ நகர் பகுதியில்  கஞ்சா விற்பனை செய்த ஆஷா (50), ஜமுனா (35) ஆகிய 2 பெண்களை எண்ணூர்  போலீசார் கைது செய்தனர்.
* திருவல்லிக்கேணி பப்பு மஸ்தான் தர்கா 5வது தெருவை சேர்ந்த சதீஷ் (29) என்பவரது வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடிய லாயிட்ஸ் சாலை பி.எம்.தர்கா தெருவை சேர்ந்த பழைய குற்றவாளி திலீப்குமார் (எ) ஆயாமூஞ்சி (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* புழல் கதிர்வேடு பகுதியில் 15 மூட்டை குட்கா பொருட்களுடன் நின்ற மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

 • bangladeshtrain

  வங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்!

 • wildfireaus

  காட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்

 • hongkongprofire

  ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்