SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணகிரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

9/17/2019 7:19:29 AM

கிருஷ்ணகிரி, செப்.17: கிருஷ்ணகிரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வை வலியுறுத்தி, ராஷ்டிய போஷான் பிரசார வாகனத்தை கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில், ராஷ்டிய போஷான் மா-2019 என்ற பிரசார வாகனம் மற்றும் பேரணியை கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், தேசிய ஊட்டச்சத்து மாதமான செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்களுக்கு அங்கன்வாடி மையங்களில் எடை பார்த்தல் மற்றும் வளர்ச்சி கண்காணிக்கப்படும். சுகாதார துறையுடன் இணைந்து வீடுகளை பார்வையிடுதல் மூலம் ரத்தசோகை, குறைந்த எடை மற்றும் வளர்ச்சி குறைபாட்டை கண்டறிதல், பச்சிளம் குழந்தைகள் உணவூட்டுதல், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி அளித்தல், அங்கன்வாடி மையங்களில் உட்புற, வெளிப்புற தூய்மை பணி மேற்கொள்ளுதல், குழந்தைகளுக்கு கை கழுவும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தல், சுத்தமான காய்கறிகள் அடங்கிய வீட்டுத்தோட்டங்களை தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் அமைத்து கொடுத்தல், ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி நாள் அனுசரித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மேலும் புதிய அங்கன்வாடி மையங்களை தொடக்கி வைத்தல் மற்றும் இணைக்கப்பட வேண்டிய அங்கன்வாடி மையங்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை உணவு செயல்முறை விளக்க கூட்டங்கள் நடத்தி, உணவு மாதிரிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் சிறு தானிய உணவு வகைகள் சமையல் போட்டி நடத்தப்படும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஊட்டச்சத்து தொடர்பான விளக்க கூட்டங்கள் நடத்தி, உணவு வகைகள் காட்சிப்படுத்தப்படும் என்றார். இப்பேரணியானது புதிய பஸ் நிலையம், பெங்களூர் ரோடு, ஆர்.சி.பள்ளி வளாகம், அரசு மருத்துவமனை, 5 ரோடு ரவுண்டானா வரை சென்று நிறைவடைந்தது. இதில் டிஎஸ்பி (பயிற்சி) நல்லசிவம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன், கண்காணிப்பாளர் வெங்கடாஜலபதி, பிஆர்ஓ சேகர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்