நகரில் 3வது நாளாக பலத்த மழை
9/17/2019 1:02:31 AM
கோவை, செப். 17: கோவை மாநகரில் மூன்றாவது நாளாக பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் மாநகர பகுதிகளான உக்கடம், டவுன்ஹால், குனியமுத்தூர், சாய்பாபாகோயில், கவுண்டம்பாளையம், வடவள்ளி, பீளமேடு, சிங்காநல்லூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
சுமார், அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த மழையின் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. வடகோவை மேம்பாலம், அவினாசி மேம்பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீர் மோட்டர் மூலம் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழையினால், திருச்சி சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை மாநகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் செய்திகள்
காரம், சுவை இல்லை, எண்ணெய் குடிக்கும் என்பதால் எகிப்து வெங்காயம் எடுபடவில்லை
மெட்ரோ ரயில் தொடர்பாக சென்னை நிபுணர்கள் கோவையில் விரைவில் ஆய்வு
கோவையில் அதிகாலையில் நிலவும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பாதிப்பு
பட்டுக்கூடு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம் நடூர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு விரைந்து வழங்க கோரிக்கை
கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் தேசிய சுகாதார குழு ஆய்வு
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது