மதுரை நகர் பகுதியை கலக்கிய 2 கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு 132 பவுன் நகைகள் பறிமுதல்
9/15/2019 4:30:35 AM
மதுரை, செப். 15: மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 132 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை, அண்ணாநகர், கே.கே.நகர், கே.புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில், ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய ேபாலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இதன்பேரில், உதவி கமிஷனர் ேவணுகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருச்செந்தூர், தெரிக்குடியிருப்பு பகுதியைச் ேசர்ந்த பெரியசாமி என்பவர் மதுரையில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில், இவரது நண்பர் ரவிச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து திருடியது உறுதியானது. இதையடுத்து இவர்களிடம் இருந்து 132 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான பெரியசாமி மீது பல்வேறு காவல் நிலையங்களில் 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
சோழவந்தான் ஏடிஎம்.மில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த டிரைவர்
மதுரை மாவட்டத்தில்ஊராட்சி தலைவர் பதவிக்கு 23 பேர் மனுதாக்கல்
வன்முறைக்கு எதிராக பெண்கள் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
ஊராட்சி வார்டுக்கு 81 பேர் மனு தாக்கல் மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு
வலையங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும்
கிராமமக்கள் கலெக்டரிடம் மனு கேங்மேன் தேர்வில் 200 பேர் பங்கேற்பு
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது