SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருமத்தூர் ஆற்றில் 6 டன் மரச்சட்டங்கள் சேகரிப்பு

9/11/2019 5:55:50 AM

அரூர், செப்.11: விநாயகர் சதுர்த்தியையொட்டி இருமத்தூர் ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டதில், 6 டன் மரச்சட்டங்கள் சேகரமாகின. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், அரூர் அருகே இருமத்தூர் ஆற்றில் கரைக்கப்பட்டன. வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் விநாயகர் சிலைகள், இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் வைக்கப்படும் மரச்சட்டங்களுடன் ஆற்றில் விடப்படும். அவ்வாறு விடும் சிலைகள் கரைந்தபின் ஒதுங்கும் மரச்சட்டங்கள், சுமார் 6 டன் அளவுக்கு தென்பெண்ணையாற்றின் கரையோரம் 2 இடங்களில் சேகரிக்கப்பட்டது. அதற்கென உள்ள குழுவினர் 2ம் தேதி முதல் நேற்று (10ம் தேதி) வரை சேகரித்து, பின்னர் அதனை ஓட்டல்கள், மரக்கடைகளில் விற்பனை செய்கின்றனர். இந்த மரச்சட்டங்கள் டன் ₹2500 என விற்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்