SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

9/10/2019 6:46:34 AM

கிருஷ்ணகிரி,  செப்.10: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வழியாக பெட்ரோலிய  எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, கலெக்டரிடம் முன்னாள்  எம்எல்ஏ., தலைமையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மனு  அளித்தனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், முன்னாள்  எம்எல்ஏ., டில்லிபாபு தலைமையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்  பிரபாகரிடம் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை  மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பாரத் பெட்ரோலியம்  நிறுவனம் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களூரு தேவனகுந்தி வரை கோவை,  திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7  மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களின் வழியாக பெட்ரோலிய எண்ணெய் குழாயை  பதிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ராயக்கோட்டை, உடையாண்டஅள்ளியில் துவங்கி காமன்தொட்டி, முத்தாலி,  நந்திமங்கலம், படேதப்பள்ளி, கும்மனப்பள்ளி, ஒட்டப்பள்ளி, பாகலூர் வழியாக  கர்நாடகா மாநில எல்லையில் உள்ள பாலிகானப்பள்ளி வரை 28 பஞ்சாயத்துகள்  வழியாக  48 கிலோ மீட்டர் தூரம் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தற்காக  குழாய் பதிக்கப்படும் போது வழியெங்கும் 70 அடி அகல விவசாய நிலம் எண்ணெய்  நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும். திட்டப்பாதையில் மரங்கள்  வளர்க்க முடியாது. சாலைகள், கோழிப்பண்ணைகள், ஆழ்த்துளை கிணறுகள் உட்பட எந்த  கட்டுமானப் பணிகளையும் செய்யக்கூடாது. கனரக இயந்திரங்களை பயன்படுத்தி,  எந்த வேலையும் செய்யக்கூடாது.  மேலும் எப்போது வேண்டுமானாலும்  திட்டப்பணிகளை மேற்கொள்ளவும், குழாய்களை சோதனை செய்திடவும்,  பயிரிடப்பட்டிருந்தாலும் அவற்றை அகற்றிக்கொள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு  அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.  எண்ணெய் குழாய்க்கு சேதம் ஏற்பட்டால்,  கசிவு ஏற்பட்டு விபத்து நடந்தால் கூட நிலத்திற்கு சொந்தகாரர் தான்  பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகளை கடும் பாதிப்பிற்குள்ளாகும்  நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தின் மதிப்பு  வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், நில அடமானம் மூலம் கடன் வழங்கும் வங்கிகள்  எண்ணெய் குழாய் போடப்பட்ட பின் நிலத்தின் மேல் கடன் கொடுப்பதில்லை. பண  மதிப்பு மிக்க தேக்கு, தென்னை, பனை, சவுக்கு, மா போன்றவற்றை விவசாயம் செய்ய  முடியாமல் விவசாயிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்தை  விளை நிலங்களை தவிர்த்து மாற்றுத்பாதையில் நெடுஞ்சாலை ஓரமாக கொண்டு செல்ல  வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக  கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகளை  வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு  வந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HalloweenDogParade

  நியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்!

 • DallasTornado2210

  டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு

 • PacificPalisadesFire

  லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்!

 • BeloHorizontePlaneCrash

  பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி

 • NaruhitoEnthronement

  ஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்