SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் ராணுவ வீரரான தந்தையின் 1.5 கோடி சொத்தை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய பாசக்கார மகன் ஆக்சிஜன் சிலிண்டருடன் குறைதீர்வு கூட்டத்தில் புகார்

9/10/2019 12:08:53 AM

வேலூர், செப்.10:₹1.5 கோடி மதிப்புள்ள சொத்தை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் ஓய்வு பெற்ற ராணுவவீரர் ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ பார்த்தீபன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர். அப்போது, வேலூர் அடுத்த இடையன்சாத்து பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரர் சொக்கலிங்கம்(82) என்பவர், ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘எனக்கு மனைவி சரோஜாம்மாள் மற்றும் ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். மகன் தியாகராஜனும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவர் தற்போது இடையன்சாத்து பகுதியில் வசித்துவருகிறார்.

கடந்த 2011ம் ஆண்டு தியாகராஜன், என்னை பராமரித்துக்கொள்வதாக கூறி எனது பெயரில் இருந்த 3 வீடுகள் மற்றும் நிலத்தை என ₹1.5 கோடி சொத்துக்களை செட்டில்மெண்ட் எழுதி பெற்றுக்ெகாண்டார். ஆனால் 3 ஆண்டுகள் மட்டுமே என்னை அவர் பராமரித்து வந்தார். அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். இதுகுறித்து 2017ம் ஆண்டு பாகாயம் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால் என் மீது பொய் வழக்கு கொடுத்து மிரட்டி வருகிறார்.ஆஸ்துமா, சர்க்கரை உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகிறேன். நான், தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு உறுதிதுணையாக யாரும் இல்லை. எனக்கு வரும் ராணுவ ஓய்வூதியத்தை வைத்து கொண்டு மருத்துவம் பார்த்து வருகிறேன். ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்று வருவதால் மாதம்தோறும் மருத்துவ செலவு அதிகரித்து வருகிறது. நான் மிகவும் துன்பப்படுகிறேன். எனவே பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2007 விதியின் கீழ் எனது சொத்தை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் சண்முகசுந்தரம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gujarath_111

  குஜராத் மாநிலம் சூரத்தில் 10 மாடிகள் கொண்ட ஜவுளி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

 • srilankaa_twinnss1

  இலங்கையில் உலக சாதனை நிகழ்ச்சியாக அதிக இரட்டையர்கள் ஒன்று கூடிய மாபெரும் நிகழ்வின் மெய்சிலிர்ப்பூட்டும் படங்கள்

 • iyesu_kudaamuu1

  இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

 • nirmalaa_alawaa1

  டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

 • telanagana_leopardd1

  தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்