SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவன் இறந்த வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை

8/22/2019 1:59:42 AM

காங்கயம், ஆக. 22:வெள்ளகோவிலில் லாரி மோதி பள்ளி மாணவன் இறந்த வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு வெள்ளகோவிலை சேர்ந்த 5ம் வகுப்பு படித்து வந்த தேவிபிரசாத் (10) என்ற மாணவன் சாலையை கடந்த போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக வெள்ளகோவில் போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு காங்கயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விபத்தை ஏற்படுத்திய, உடுமலை அடுத்த ஜல்லி பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பால்ராஜ் (48) என்பவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு பிரவீன்குமார் தீர்ப்பு வழங்கினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்