மாநிலம் முழுவதும் ரூ.1,250 கோடி செலவில் சிறுபாசன குளங்கள், குட்டை சீரமைக்கும் பணி
8/22/2019 1:52:22 AM
சூலூர்,ஆக.22: தமிழகம் முழுவதும் ரூ.1250 கோடி செலவில் சிறுபாசன குளங்கள்,குட்டைகள் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். சூலூர் தாலூகா கரையாம்பாளையம் பகுதியில் உள்ள குட்டையை தூர்வாரும் பணியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று துவக்கி வைத்து பேசியதாவது: தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் 110ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 5 ஆயிரம் சிறுபாசன குளங்கள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும் 25 ஆயிரம் குட்டைகள் மற்றும் ஊரணிகளை தலா ஒரு லட்சம் மதிப்பிலும் தூர்வாரும் பணி கூடுதல் சிறப்பு நிதியிலிருந்து ரூ.500 கோடி செலவில் மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரம் சிறுபாசன குளங்கள் தலா ரூ.5லட்சம் மதிப்பீட்டிலும் 25 ஆயிரம் குட்டைகள் மற்றும் ஊரணிகளை தலா ரூ.2லட்சம் மதிப்பிலும் நீர் உள்ளே வரும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் ரூ.750 கோடி செலவிலும் மொத்தமாக ரூ.1,250கோடி செலவில் சிறுபாசன குளங்கள், குட்டை மற்றும் ஊரணிகளில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 3 சிறுபாசன குளங்கள் மற்றும் 210 குட்டை, ஊரணிகள் தூர்வரும் பணிகள் ரூ.2.25 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் துவக்கமாக சூலூர் வட்டாரம் மயிலம்பட்டி கிராம ஊராட்சியில் கரையாம்பாளையம் கிராமத்தில் குட்டை தூர்வாரும் பணிகள் துவக்கி வைக்கப்படுவாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ராசாமணி,சூலூர் எம்.எல்.ஏ.கந்தசாமி, சூலூர் தாசில்தார் மீனாகுமாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
காரம், சுவை இல்லை, எண்ணெய் குடிக்கும் என்பதால் எகிப்து வெங்காயம் எடுபடவில்லை
மெட்ரோ ரயில் தொடர்பாக சென்னை நிபுணர்கள் கோவையில் விரைவில் ஆய்வு
கோவையில் அதிகாலையில் நிலவும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பாதிப்பு
பட்டுக்கூடு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம் நடூர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு விரைந்து வழங்க கோரிக்கை
கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் தேசிய சுகாதார குழு ஆய்வு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்