SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ₹1.32 கோடி உண்டியல் காணிக்கை

8/22/2019 12:31:16 AM

திருவண்ணாமலை, ஆக.22: திருவண்ணாமலை அண்ணாமலையார் ேகாயிலில் ₹1.32 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்து செய்து செல்கின்றனர். இதுதவிர ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாத(ஆடி) பவுர்ணமி கடந்த 14ம் தேதி மாலை 4.30 மணிக்கு தொடங்கி, மறுநாள்(15ம் தேதி) மாலை 6.10 நிறைவடைந்தது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கடந்த 14ம் தேதி இரவு பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் வந்தனர்.

பவுர்ணமி முடிந்ததும் அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாத (ஆடி) பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் நேற்று நடந்தது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இப்பணியில் 150 பேர் ஈடுபட்டனர். இதில், ₹1 கோடியே 32 லட்சத்து 69 ஆயிரத்து 315ம், 145 கிராம் தங்கமும், 1810 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்