SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேச்சிப்பாறை சீரோபாயின்டில் 2 ஆலயம், 44 ஆக்ரமிப்பு வீடுகள் இடிப்பு அதிரடிப்படை குவிப்பால் பரபரப்பு

8/22/2019 12:23:04 AM

அருமனை, ஆக.22: பேச்சிப்பாறை  சீரோபாயின்டில் நேற்று 2 ஆலயம் மற்றும் 44 ஆக்ரமிப்பு வீடுகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் அந்த  பகுதியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.பேச்சிப்பாறை சீரோபாயின்ட் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக  சுமார் 50க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடும்பத்துடன் வசித்து  வருகிறார்கள். தற்போது பேச்சிப்பாறை அணையில் சாய்வணை கட்டும்  பணிகள், பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அணையின்  பாதுகாப்பு கருதி, இந்த பகுதியில் அணையின் கீழ்பகுதியில் அரசு  நிலத்தில் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை  சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாற்று ஏற்பாடு  செய்யும் வரை இந்த வீடுகளை இடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த  திங்கள்கிழமை அனைத்து கட்சிகள் சார்பில் பேச்சிப்பாறை சீரோ பாயின்ட்  பகுதியில்  சாலைமறியல் போராட்டம் நடந்தது.இந்த நிலையில் நேற்று காலை தக்கலை சப்-கலெக்டர் சரண்யா அறி மேற்பார்வையில் தாசில்தார்கள்,  மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சீரோபாயின்ட் பகுதிக்கு வந்தனர். பின்னர்  ஆக்ரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக  மின் வாரிய  ஊழியர்கள் வீடுகளில் உள்ள மின்  இணைப்புகளை துண்டித்து மின் மீட்டரை அகற்றினர்.

 பெரும்பாலான வீட்டினர் தாங்களாகவே முன் வந்து தங்களது வீடுகளில் இருந்த  உடமைகளை வெளியே எடுத்து வந்தனர். 2 ஆலயம் மற்றும் 44 வீடுகள் இடிக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில்  சம்பவ இடத்தில் அதிரடிப்படை உள்பட 300 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக பேச்சிப்பாறை- கோதையாறு சாலையில் செல்லும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.  அரசு பஸ்கள் காலையில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் வழக்கம் போல் இயங்கின. வீடுகளை இழந்த மக்கள் சோகத்துடன் நின்றனர். பலர் வீடு மற்றும் உடமைகளை இழந்து அழுது புலம்பினர். இவர்களுக்கு பேச்சிப்பாறை சமத்துவபுரம் அருகே மாற்று இடம்  ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • greexe_111

  கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • octo_111

  ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

 • batman_tshirt11

  காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

 • circle_of_lightss1

  மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

 • climate_strike11

  பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்