SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க விழிப்புணர்வு அவசியம்

8/22/2019 12:19:39 AM

புதுக்கோட்டை, ஆக.22: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளை தடுக்க போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து துறைகள் இணைந்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோடடை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் சாலைகளில் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டது. குறிப்பாக கீரனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 7 கார்கள் மோதி விபத்தை ஏற்படுத்தி 5 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். இதுபோல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் விபத்து ஏற்பட்டு இறந்து விடுகின்றனர். சில இடங்களில் நடக்கும் விபத்துகளில் காயமடைந்து புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்துகள் அனைத்தும் வாகன ஓட்டிகள் அஜாக்கரதையாக ஏற்பட்ட விபத்துகள் என்று அந்தந்த விபத்துகள் நடந்த இடத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார் தெரிவித்தனர். விபத்தில் இறந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தால் கட்டாயமாக காயத்துடன் தப்பித்து இருக்கலாம்.

நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும்போது சீட் பெல்ட் அணிந்திருந்தால் கட்டாயம் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால் போலீசார் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் வாகன ஓட்டிகளை மிரட்டி அபராதம் விதிக்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை, சீட் பெல்டின் முக்கியதுவத்தையும் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோல் போலீசார் வழக்கு பதிவு செய்து வாகன ஓட்டிகளின் லைசென்சை பெற்று அந்தந்த மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கின்றனர். அங்கு வாகன ஓட்டிகள் சென்று சில நடைமுறைகளை செய்துவிட்டு லைசென்சை பெற்று செல்கின்றனர். அங்கேயும் அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம் நடைமுறைகைளை முடித்து கொண்டு எந்தவித விழிப்புணர்வும் செய்யாமல் அப்படியே அனுப்பி வைக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட், சீட்பெல்ட் முக்கியத்துவம் மற்றும் மோட்டார் வாகன சட்ட வசதிகள் உள்ளிட்டவைகள் தெரியவில்லை.இதனால் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க போலீசார் மற்றும் மோட்டார் வாகன துறை இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி விபத்துகளை குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-09-2019

    20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • motor_strike1

    புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

  • jellifish_shapee1

    உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

  • malar_palam11

    கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்