SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குண்டும், குழியுமான கீழநம்மங்குறிச்சி சாலை மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி

8/22/2019 12:14:44 AM

முத்துப்பேட்டை, ஆக.22: குண்டும், குழியுமான கீழநம்மங்குறிச்சி சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் பைபாஸ் சாலையிலிருந்து கீழநம்மங்குறிச்சியை கடந்து பெத்தவேளாண்கோட்டகம் வரையிலான சாலை என்பது இப்பகுதி மக்களுக்கு ஒரு முக்கிய சாலையாகும். இவ்வழியாக இப்பகுதிகளுக்கு மட்டுமின்றி தஞ்சை மாவட்டம், மதுக்கூர் சிரமேல்குடி, தஞ்சாவூர் போன்ற பகுதிக்கு செல்லும் மக்களும் பயன்படுத்தி வரும் ஒரு சாலையாகும். இதில் கோவிலூர் பைபாஸ் சாலையிலிருந்து கீழநம்மங்குறிச்சி வரை உள்ள சுமார் 3.2கிமீ. சாலை தற்பொழுது குண்டும் குழியுமாக உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் 4 முறை அரசு பேருந்தும், 4 முறை தனியார் மினி பேருந்தும் சென்று வருகிறது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சுமார் 7வருடமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வில்லை. இதனால் இப்பகுதி மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி வாகனங்கள் மற்றும் அவசரக்காலத்தில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை செல்ல இயலாத சூழ்நிலைக்கு உள்ளன. இதுகுறித்து பலமுறை இப்பகுதி மக்கள் இந்த சேதமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் இந்த சாலையால் அதிருப்திடைந்த இப்பகுதி மக்கள் சுமார்100க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமையில் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி இது குறித்து உயர்அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதுநாள்வரை இந்த சாலையை சீரமைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது சில தினங்களாக பெய்து வரும் மழைக்கு மழைநீர் சாலையின் பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்இதுகுறித்து இளைஞர்பெருமன்ற நிர்வாகி சிவசந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர்மீனாட்சிசுந்தரம் ஆகியோர்கூறுகையில். உடனடியாக சாலையை செப்பனிட்டு சீரமைத்து தரவேண்டும் இல்லையேல் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-02-2020

  29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்