SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார் டிரைவர் கொலையில்

8/20/2019 12:59:23 AM

நண்பர்கள் 3 பேர் கைதுஓசூர், ஆக.20: தேன்கனிக்கோட்டை அருகே, கார் டிரைவர் கொலை வழக்கில் அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தேன்கனிக்கோட்டை தாலுகா தளி கொத்தனூரைச் சேர்ந்தவர் விஜயகுமார்(31). கார் டிரைவரான இவர், கடந்த 17ம் தேதி இரவு மத்திகிரி அருகே உள்ள நஞ்சாபுரத்தில் உள்ள தனது நண்பரான மஞ்சுநாத்(33) என்பவரை பார்க்க சென்றார். அப்போது அவரிடம் தான் கொடுத்திருந்த 2 லட்சத்தை கேட்டார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், விஜயகுமாரை மஞ்சுநாத் மற்றும் அவரது நண்பர்களான சுக்ரீவன் (38), சின்னஎலசகிரியை சேர்ந்த மஞ்சுநாத் (33) ஆகியோர் சேர்ந்து, கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்த மத்திகிரி போலீசார், சின்னஎலசகிரியை சேர்ந்த நாகப்பா மகன் மஞ்சுநாத்(33), நஞ்சாபுரம் பகுதியை சேர்ந்த நாராயணப்பா மகன் மஞ்சுநாத்(33) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவான சுக்ரீவனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சுக்ரீவனை போலீசார் கைது செய்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரும், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்