SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூளகிரியில் குடிநீர் விநியோகம் கேட்டு பிடிஓ அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

8/20/2019 12:58:52 AM

சூளகிரி, ஆக.20: சூளகிரியில் குடிநீர் விநியோகம் கேட்டு, பெண்கள் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சூளகிரி ஊராட்சியில் கோட்டை தெரு மற்றும் கீழ் தெருவில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. பழுதடைந்த மின்மோட்டரை சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த 60க்கும் மேற்பட்ட பெண்கள், பிடிஓ அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து, அலுவலகத்திலிருந்த பிடிஓ ராமசந்திரனை பெண்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, பொதுமக்களிடம் பேசிய பிடிஓ ராமச்சந்திரன், துரை ஏரியில் ₹1 கோடி மதிப்பில் 2 கிணறுகள் அமைத்து, பைப் லைன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து பணிகளும் முடிந்து குடிநீர் விநியோகிக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், பிடிஓ அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-09-2019

    15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-09-2019

    14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indo_fire_poison1

    இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

  • TrainDerailCongo50

    காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

  • unavu_mudhalvar1

    மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்