SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் விசாரணையில் முன்னாள் கவுன்சிலர் சாவு சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

8/20/2019 12:02:38 AM

நாகர்கோவில், ஆக.20: மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று  நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியது: மத்திய அரசின் நிதி ஆணைக்குழு  பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்துக்கு ரூ.5920 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு ரூ.2243 கோடி மட்டுமே செலவு  செய்துள்ளது. மீதமுள்ள தொகையை திருப்பி அனுப்பி உள்ளது. தமிழக  அரசு தற்போது கமிஷன் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்துவது தான் இதற்கு  காரணம். கமிஷன் வராத திட்டங்களை செயல்படுத்தாமல் விட்டு விடுவதால் ₹3677  கோடி திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.  ஏற்கனவே  மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கவில்லை. இந்த நிலையில்  கிடைத்த நிதியையும் முறையாக பயன்படுத்தாமல் தமிழக அரசு திருப்பி அனுப்வதால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை ரூ.4 உயர்த்துவதாக கூறி பாலின் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி உள்ளனர். அரசு பால் வியாபாரம் செய்யவில்லை. சேவைதான் செய்கிறது. எனவே பாலின் விலையை உயர்த்தாமல், அதற்கு மானியத்தை அரசு வழங்க வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, கோழி  வளர்ப்பு திட்டத்தின் கீழ் கோழிகள் வழங்கப்படுகின்றன. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும்போது, ஆளும்  கட்சியினர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் சலுைக அளிக்கின்றனர். இதனால் உண்மையான பயனாளிகள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கம்யூனிஸ்ட் உள்பட ஜனநாயக அமைப்புகள்  மக்கள் நல  திட்டங்களுக்காக  போராடும் போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது கண்டனத்திற்குரியது. மத்தியஅரசு  அரசியல் ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளது. நாட்டில் எந்தவித வளர்ச்சி  திட்டங்களும் நடக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளது. இதுபோன்ற  பிரச்னைகளை மறைப்பதற்காக காஷ்மீரில் நடைமுறையில் இருந்த 370வது  சட்டப்பிரிவை நீக்கி மக்களை திசை திருப்பியுள்ளனர்.
வள்ளியூரில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற முன்னாள் கவுன்சிலர் லீலாபாய் ரத்தவாந்தி எடுத்து இறந்துள்ளார். அவரது உடலை அவசரமாக உடற்கூறாய்வு செய்து, எரித்துள்ளனர். எனவே இதுபற்றி சிபிசிஐடி ேபாலீசார் விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், தொழில் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. வேைலயின்மை அதிகரித்துள்ளது. அரசியல் ரீதியாக தோல்வியை தழுவிய பா.ஜனமா அரசு அதனை திசை திருப்பவே காஷ்மீருக்கு 370 பிரிவை ரத்து ெசய்துள்ளது. தமிழக அரசு 20க்கும் குறைவான மாணவர்கள் வந்தால் அப்பள்ளியை மூடுகிறது.

கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு அரசு பள்ளிகளை மேம்படுத்தியதால், 5 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருருந்து விலகி அரசு பள்ளியில் ேசர்ந்துள்ளனர். புதிய கல்வி  கொள்கை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் ரஜினியை வைத்து ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது. தற்போது மத்திய அரசின் அனைத்து  துறைகளிலும் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவாவை சேர்ந்த நபர்களை அதிகாரிகளாக பணியில்  அமர்த்துகின்றனர். இந்தியா ஜனநாயக மற்றும் மதசார்பற்ற நாடு. எனவே இதுபோன்ற  செயல்பாடுகளை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-11-2019

  14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்