கொலை வழக்குகளில் துப்பு துலக்கிய மோப்பநாய் ராக்கிக்கு எஸ்பி பாராட்டு
8/14/2019 12:27:15 AM
விழுப்புரம், ஆக. 14: விழுப்புரம் மாவட்டத்தில் கொலைவழக்குகளில் துப்புதுலக்கிய மோப்பநாய் ராக்கிக்கு எஸ்பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த திருநங்கை கொலைவழக்கிலும், எலவனா சூர்கோட்டை பகுதியில் நடந்த சிறுவன் கொலைவழக்கு சம்பவத்தில் துப்புதுலக்கி குற்றவாளிகளை கைதுசெய்ய உதவிபுரிந்த மோப்பநாய் ராக்கிக்கு எஸ்பி ஜெயக்குமார் தனது அலுவலகத்தில் பாராட்டி சான்றிதழை வழங்கினார்.
இதே போல் மேற்கு காவல்நிலையத்தில் பைக்திருடனை கண்டுபிடித்து 15 பைக்குகளை பறிமுதல் செய்த மேற்குகாவல்நிலைய எஸ்ஐ ஞானசேகரன் தலைமையிலான போலீசாருக்கும், செஞ்சி காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில்செயின்பறிப்பு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்த எஸ்ஐ மருதப்பன் தலைமையிலான போலீசாருக்கும், கோட்டக்குப்பம் சோதனைச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அகவேல், சுந்தரமூர்த்தி, சிவசக்திமைந்தன் ஆகியோரை பாராட்டி எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார். தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தில் மாதம் ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ரேஷன் கடை
தியாகதுருகத்தில் 2 அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை
குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து விழுப்புரத்தில் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
நெய்வேலியில் தகராறை தட்டிக் கேட்ட 3 பேருக்கு கத்தி வெட்டு
விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்