SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போளூர் மக்கள் கோரிக்கை ராந்தம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

8/8/2019 12:16:57 AM

திருவண்ணாமலை: போளூர் அடுத்த ராந்தம் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக்கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போளூர் தாலுகா ராந்தம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலனோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் சிறிய ஏரியும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரியும் உள்ளது. இந்த இரண்டு ஏரிகளின் நடுவே ஏரிக்கால்வாய் உள்ளது. இக்கால்வாயின் இடையே கடந்த 2002ம் ஆண்டு நீர்தேக்கும் குளம் கட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த ஏரிக்கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர். எனவே, மழைநீரை சேகரிக்க முடியாமல் ஏரி எப்போதும் வறண்டு காணப்படுகிறது. மேலும், ஏரிக்கால்வாய் தூர்ந்து போனதால் சிறிய குளங்களும் நிறைவதில்லை. பெரிய ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களும் தூர்ந்து போயுள்ளது. தற்போது, ஏரிகளுக்கு இடையில் இருந்த நீர்தேக்க குளமும் ஆக்கிரமிப்பாளர்களால் காணாமல் போய்விட்டது. இதனால், ராந்தம் கிராமத்தில் உள்ள இரண்டு ஏரிகளிலும் தண்ணீரின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, 6 முறை மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வரத்து கால்வாய்களை உடனடியாக தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்