வாழப்பாடி அருகே டூவீலர் திருடிய வாலிபர் கைது
7/18/2019 6:38:48 AM
வாழப்பாடி, ஜூலை 18: வாழப்பாடி அருகே சிங்கபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் தியாகராஜன்(47). இவர் தனது டூவீலரில் மின் மோட்டார் பழுது பார்க்க வேண்டி, ஊராட்சி அலுவலகத்திற்கு மதியம் வந்தார். பின்னர் எதிரே உள்ள இடத்தில் டூவீலரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். அரைமணி நேரம் கழித்து மோட்டாரை சரி செய்து வந்த போது, டூவீலரை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதை தொடர்ந்து வாழப்பாடி போலீசில் தியாகராஜன் புகார் செய்தார். இதன் பேரில் எஸ்ஐ கிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அதில் அதே பகுதியை சேர்ந்த சடையப்பன் என்பவர் டூவீலரை திருடிச்சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்த சடையனை போலீசார் கைது செய்து, டூவீலரை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் 21 ஆயிரம் பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி
விளை நிலங்களில் ஏரி நீர் புகுந்த விவகாரம் விவசாயிகள் மோதல் முடிவுக்கு வந்தது
கெங்கவல்லி அருகே மலைகிராமத்தில் சாலை அமைக்க நிலம் அளவீடு
கெங்கவல்லி அருகே மணல் கடத்திய 3 பேர் கைது
உள்ளாட்சி தேர்தலுக்கு 4வது நாளில் 831 பேர் வேட்புமனு தாக்கல்
ஊரக உள்ளாட்சி பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்
150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்
ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது