SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலையாரிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

7/18/2019 5:34:30 AM

ராமநாதபுரம், ஜூலை 18:  ராமநாதபுரம் அருகே சிக்கல் கிராமத்தில் தலையாரியாக வேலை பார்ப்பவர் ராமநாதபுரத்தை சேர்ந்த கோபால் மனைவி பரமேஸ்வரி(42). கடந்த 15ம் தேதி    சொக்கானை கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(45) வாரிசு சான்றிதழ் கேட்டு மனு அளித்துள்ளார். மனு மீதான விசாரணை நடத்த ஆர்ஐ ஹேமா, விஏஓ ராஜன், தலையாரி பரமேஸ்வரி ஆகியோர் சென்றுள்ளனர். கிராமத்தில் சக்திவேல் பற்றிய தகவல்களை விசாரணை நடத்தி விட்டு அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் சிக்கல் கிராம உதவியாளர் அலுவலகத்திற்கு வந்த சக்திவேல், ஊரில் பெரிய மனிதராக உள்ள என்னை பற்றி எப்படி விசாரிக்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், பெண் ஊழியர் என்று பாராமல் தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் தலையாரி பரமேஸ்வரி சிக்கல் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப்பதிந்து சொக்கானை கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். லை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பெண் ஊழியரை தகாத வார்த்தைகளில் பேசியது என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்