SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாமல்லபுரத்தில் தாய், மகளை கடத்தி பாலியல் தொல்லை: பள்ளி வேன் டிரைவர் கைது

7/18/2019 12:36:10 AM

திருக்கழுக்குன்றம், ஜூலை 18: மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி வாசுகி (33). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த குழந்தைகள் இருவரும்  மாமல்லபுரத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.இந்நிலையில், வாசுகி கடந்த 4ம் தேதி தனது 5 வயதுடைய பெண் குழந்தையுடன் ருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இரவாகியும் வீடு திரும்பாததால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தன் பிள்ளைகள் படிக்கும் அந்த தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்க்கும் மாமல்லபுரத்தை சேர்ந்த சரவணன் (எ) கைலாப் (40) என்பவர் பண்டிதமேடுக்கு வந்து பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும்போது தனது மனைவியிடம் அதிகமாக பேசுவது, அடிக்கடி தவறான எண்ணத்தோடு முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் சரவணன் ஈடுபட்டதாகவும், இதனால் தனது மனைவி மற்றும் குழந்தையை சரவணன் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் மீது மாமல்லபுரம் போலீசில் சுந்தரமூர்த்தி புகார் செய்தார்.

பின்னர் போலீசார் அப்பள்ளியில் வேலைப் பார்க்கும் இதர டிரைவர்களிடம் விசாரித்ததில் வாசுகி மற்றும் குழந்தையை சரவணன் கடத்தியிருக்கலாம் என்று போலீசார் உறுதிபடுத்தினர். பின்னர் போலீசார் சரவணனின் செல்போன் சிக்னல் மூலம் கண்காணித்ததில் இவர்கள் கன்னியாகுமரியில் இருப்பது தெரிந்தது. போலீசார் தன்னை கண்காணிப்பதை அறிந்த சரவணன் உடனடியாக இடத்தை மாற்றி தாய், மகள் இருவரையும் கேரளா மாநிலம் கோவளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கத்தி முனையில் மிரட்டி அடைத்து வைத்திருந்துள்ளான். பிறகு நேற்று முன்தினம் இரவு மேல்மருவத்தூரில் இவர்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாமல்லபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ்.ஐ சதாசிவம் மற்றும் போலீசார் அங்கு சென்று சரவணணை கைது செய்து. வாசுகி மற்றும் அவரது குழந்தையை மீட்டனர்.

இதுகுறித்து போலீசாரிடம் வாசுகி கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது, ”நானும் என் குழந்தையும் கடந்த 4ம் தேதி திருக்கழுக்குன்றம் மருத்துவமனைக்கு செல்ல பூஞ்சேரி பேருந்து நிலையத்தில் பஸ் ஏற காத்திருந்தபோது ஒரு ஆட்டோவில் வந்த சரவணன் தான் திருக்கழுக்குன்றம் செல்வதாகவும் உங்களையும், குழந்தையும் மருத்துவமனையில் விட்டுவிடுகிறேன் என கூறி அழைத்து சென்றான். ஆட்டோவில் ஏறியவுடன் மயக்க மருந்து தடவிய கைக்குட்டையை எங்கள் முகத்தில் வைத்த போது சுயநினைவை இழந்துவிட்டோம். பிறகு மயக்க தெளிந்து பார்த்தபோது கன்னியாகுமரிக்கு எங்களை கடத்தி வந்துள்ளதை உணர்ந்தேன். மேலும் அங்குள்ள ஒரு விடுதியில் அடைத்து வைத்து என் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு உன் குழந்தையை கொன்று விடுவேன் எனக்கூறி என்னை கத்தியை காட்டி மிரட்டி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். வீட்டிற்கு போகலாம் என்று சொன்ன என் குழந்தையையும் அடித்து சித்ரவதை செய்தான். மேலும் உன் குடும்பத்தினரை ஒரு லட்ச ரூபாய் பணம் கொண்டு வரசொல். உங்களை விட்டு விடுகிறேன் இல்லையென்றால் குழந்தையை கொன்றுவிடுவதாகவும்  மிரட்டினான். மேலும் அவனிடம் இருந்த பணம் காலியாகவே என்னுடைய கால் பவுன் மோதிரத்தை பிடுங்கி அதை விற்று பிறகு ஒரு பேருந்தில் மேல்மருவத்தூருக்கு அழைத்து வந்தான்.”
இவ்வாறு போலீசாரிடம் வாசுகி கூறினார்.இதற்கிடையில் போலீசார் தனது புகைப்படத்தை வைத்து தன்னை தேடுவதை அறிந்த எப்போதும் தாடியுடன் காணப்படும் சரவணன் தன்னை யாரும் அடையாளம் காணாத வகையில் கன்னியாகுமரியில் தாடியை மழித்து மொட்டை போட்டுள்ளான். தற்போது வாசுகி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சரவணன் (எ) கைலாப் மீது மாமல்லபுரம் போலீசார் பாலியல் துன்புறுத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் வழக்கு செய்து சரவணனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-01-2020

  26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-01-2020

  25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

 • rp23

  நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்