ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
7/18/2019 12:20:54 AM
புதுச்சேரி, ஜூலை 18: மத்திய அரசு பட்ஜெட்டை கண்டித்து புதுவையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் மக்களுக்கு விரோதமான பட்ஜெட்டை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலையை எதிர்த்தும் புதுவை மாநில ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். இதில் மாநில துணைத் தலைவர்கள் கலியபெருமாள், சந்திரசேகரன், ரவி, செயலாளர்கள் தயாளன் என்ற பூபாலன், செந்தில்முருகன், ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏஐடியுசி செயல் தலைவர் அபிஷேகம் போராட்டத்தை முடித்து வைத்தார்.
மேலும் செய்திகள்
நகராட்சி அதிகாரியை தாக்கி துணிகர கொலை மிரட்டல்
எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்
பணி நாட்களை குறைக்க திட்டம் ஊர்க்காவல் படையினர் ஊதியம் குறைப்பு
பேன்சி எண்கள் ஏலம் 9ம் தேதி பதிவு துவக்கம்
புதுவையை நிதிக்குழுவில் சேர்க்காவிட்டால் 2021ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டத்தை செயல்படுத்த முடியாது
நகராட்சி அலுவலகங்களில் மகளிருக்கு செக்யூரிட்டி பணி
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்