SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமராஜர் 117வது பிறந்த நாள் விழா

7/16/2019 5:12:03 AM

கோவை, ஜூலை 16: கோவையில் காமராஜர் 117வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. கோைவ மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் 117வது பிறந்த நாள் விழா கீதா ஹால் ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கி, காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், இனிப்பு வழங்கினார். பள்ளி குழந்ைதகளுக்கு இலவச நோட்டு-புத்தகம் வழங்கினார். விழாவில், நிர்வாகிகள் பச்சைமுத்து, வீனஸ் மணி, கணபதி சிவக்குமார், சவுந்தரகுமார், கிருஷ்ணமூர்த்தி, இராம.நாகராஜ், கோவை போஸ், காந்தகுமார், வசந்த், வக்கீல் கருப்புசாமி, திலகவதி, குமரேசன், குருசாமி, உமாபதி, சண்முகம், வினோத், கார்த்திக், சீனிவாசன், கருப்பசாமி, ரூபார்ட், ஆரோக்கியசாமி, செல்வராஜ், காமராஜ்துல்லா உள்பட பலர் பங்கேற்றனர். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் 117வது பிறந்த நாள் விழா ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கி, காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையொட்டி, 200 பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு-புத்தகம் வழங்கப்பட்டது. விழாவில், நிர்வாகிகள் இன்ஜினியர் ராதாகிருஷ்ணன், கே.பி.எஸ்.மணி, சின்னராஜ், விஜயகுமார், வெள்ளிங்கிரி, பேரூர் மயில், மணிகண்டன், சோ மணி, காளிதாஸ், நடராஜ், சுப்ரமணியன், வாணி முருகன், ரங்கசாமி, தங்கதுரை, அயூப்கான், தங்கமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.  கோவை சொக்கம்புதூரில் நேற்று நடந்த காமராஜர் 117வது பிறந்த நாள் விழாவுக்கு மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் சொக்கம்புதூர் கனகராஜ் தலைமை தாங்கி, காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாசாணன், மாரிமுத்து, வேணுகோபால், செல்வபுரம் ஆனந்த், கதிரேசன், சக்தி சதீஷ், கோவை அனீபா, பொன்ராஜ், ராணி, காளிதாஸ், சரவணன், ராம்நாத், நாகஜோதி, தீபா, முத்தம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

கோவை மாநகர் தெற்கு மாவட்ட த.மா.கா சார்பில் காமராஜர் 117வது பிறந்த நாள் விழா ஆடீஸ் வீதியில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வி.வி.வாசன் தலைமை தாங்கி, காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில், த.மா.கா மாநில துணை தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம், இளைஞர் அணி மாநில துணை தலைவர் அருண்பிரகாஷ், அருணேஸ்வரன், வளர்மதி கணேசன், சார்லஸ், குனிசை ரவிச்சந்திரன், அய்யாசாமி, தமிழன் பாபு, சதீஷ், நாகராஜ், ஆறுமுகம், பாலு உள்பட பலர் பங்கேற்றனர். கோவை மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கம் (எச்.எம்.எஸ்) சார்பில் காமராஜர் 117வது பிறந்த நாள் விழா அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி, திருச்சி ரோடு காமாட்சிபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு எச்.எம்.எஸ் மாநில செயலாளர் ராஜாமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், பொன்னுசாமி, கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசேகர், மாணிக்கம், துரைசாமி, ருக்குமணி, மனோகரன், தேவராஜன், கோவிந்தராஜூலு, சுப்பையன், மருதாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

 • yamunariver20

  கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்