SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் அமைச்சர் கக்கன் திறந்து வைத்த அரசு பள்ளியின் கல்வெட்டு குப்பைக்கு சென்றது மணியாச்சி அருகே கேட்பாரற்று கிடக்கிறது

7/16/2019 3:02:52 AM

ஓட்டப்பிடாரம், ஜூலை 16: ஓட்டப்பிடாரம் தா
லுகா, மணியாச்சியை அடுத்துள்ளது கொல்லங்கிணறு கிராமம். தமிழகம் சென்னை மாகாணமாக இருந்த போது அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில், ஓட்டப்பிடாரம் அருகே கொல்லங்கிணறில் இந்து ஹரிஜன உயர்தர ஆதாரப்பள்ளி என்ற பள்ளிக்கூடம் கட்டப்பட்டது. 26.2.1959ல் இந்த பள்ளி கட்டிட திறப்பு விழா நடந்துள்ளது. அப்போதையை நெல்லை எம்பி ஆர்.எஸ்.ஆறுமுகம் தலைமையில் சென்னை மாகாண மராமத்தி இலாகா அமைச்சர் கக்கன் பள்ளியை திறந்து வைத்து பெருமை சேர்த்துள்ளார்.

 இப்பள்ளி டாக்டர், இன்ஜினியர் உள்ளிட்ட பல அறிஞர் பெருமக்களை உருவாக்கியுள்ளது அனைவரையும் மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. தற்போது இந்தப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்து நிற்கிறது. ஒரே வளாகத்தில் ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி கட்டிடம் தனித்தனியாக செயல்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்தப்பள்ளிக்கு அடித்தளமிட்டு இப்பகுதியில் பள்ளி அமைய காரணமாக இருந்தவர் அப்போதைய சென்னை மாகாண முதல்வரான காமராஜர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கொல்லங்கிணறு கிராமத்தில் இந்து ஹரிஜன ஆதாரப்பள்ளி அமைக்கப்பட்டது. தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு கூட பணம் ஏதும் சேர்த்து வைக்காத அப்போதைய மராமத்தி இலாகா (பொதுப்பணித்துறை) அமைச்சராக இருந்த கக்கன் திறந்து வைத்ததாக கூறப்படும் பள்ளியின் கல்வெட்டு தற்போது அங்குள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி சின்னாபின்னமாக கிடக்கிறது.

 பள்ளியை திறந்து வைத்த அமைச்சரான கக்கனின் பெயரை உலகம் உள்ளவரை அப்பகுதி மக்கள் அவருக்கு புகழ் சேர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் அந்த கல்வெட்டு இப்போது கிடக்கும் சூழலை பார்க்கும் போது கவலையளிப்பதாக உள்ளது.   பள்ளியை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் அதே நேரத்தில் பள்ளி வளர்ந்து வந்த பாதையை அங்கு படிக்கக்கூடிய எதிர்கால தலைமுறையினரும் அறியும் வகையில் கல்வெட்டை உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் வைத்திருக்க வேண்டும். அதனை விடுத்து குப்பையில் கல்வெட்டு கிடப்பது அனைவரையும் வேதனை அடைய செய்கிறது.

கலெக்டரும் பாராமுகம்  கொல்லங்கிணறு பள்ளியை கடந்த ஜூலை 7ம் தேதி ஆய்வு செய்ய வந்த தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் அந்த கல்வெட்டை காண்பித்தார். ஆனால் அதனை கலெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவருமே கண்டும், காணாததுமாக சென்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்