SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

7/16/2019 1:54:29 AM

ஓசூர், ஜூலை 16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஓசூரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் நீலகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி தலைவர் சூர்யகணேஷ், எஸ்சி-எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் கொத்தூர் முனிராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முரளீதரன் பங்கேற்று, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்தார். இதேபோல், நகராட்சி உருதுப்பள்ளியில் காங்கிரஸ் சிறுபான்மைத்துறை சார்பில் நடைபெற்ற விழாவிற்கு, மசூத் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் இந்திராணி, சரோஜம்மா, கீர்த்திகணேஷ், வித்யாசாகர், மூர்த்தி, பூங்கொடி, சண்முகம், பிரவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஓசூரில் உள்ள காமராஜர் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஐஎன்டியூசியின் தேசிய அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மனோகரன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஓசூரில், டிவிஎஸ் தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஐஎன்டியூசி துணைத்தலைவரும், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தொழிற்சங்க தலைவருமான குப்புசாமி கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தொழிற்சங்க துணைத்தலைவர் முனிராஜ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் சுரேஷ்குமார். இணை செயளாலார் நம்பிகணேசன், பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேன்கனிக்கோட்டை: கெலமங்கலம் அருகே, அக்கொண்டப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் சாதப்பா தலைமை தாங்கி, காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் நடந்த விழாவிற்கு, வட்டார தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன், காமராஜர் படத்தை திறந்து வைத்து இனிப்பு வழங்கினார். மாவட்ட தலைவர் சத்தீயசீலன், நகர தலைவர் மாது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மத்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு, காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் மாது தலைமையில் சிறுபான்மை பிரிவு தலைவர் பாபு(எ) மஹபூப்பாஷா, ராகிப்ஜமால், சாகுல்ஹமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கிளை தலைவர் சிவலிங்கம் தலைமையில், காமராஜ் படத்திற்கு மாலை அணிவித்தனர். முன்னாள் வட்டார தலைவர் பெருமாள், கார்த்திக் முனுசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்