குழந்தை வீச்சு கொடூர தாய்க்கு வலை
7/16/2019 12:11:22 AM
திருவண்ணாமலையில் பிறந்து சில நிமிடங்களே ஆன நிலையில் கலெக்டர் அலுவலக கழிவறையில் பெண் திருவண்ணாமலை, ஜூலை 16: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறையில் பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் காலை 6 மணியளவில் புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்திற்கு எதிரே கழிவறைக்கு சென்றார்.அப்போது, அங்கு குழந்தை அழுகுரல் கேட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் ஓடிச்சென்று தன்னுடன் பணிபுரியும் நபர்களிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்த போது, துணியில் சுற்றிய நிலையில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை சுத்தப்படுத்தப்படாமல், ரத்தத்துடன் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை பெண் ேபாலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். பின்னர், இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து, அலுவலக ஊழியரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தையை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.பிறந்து சில நிமிடங்களே ஆன நிலையில் பச்சிளம் பெண் குழந்தையை வீசி சென்ற கொடூர தாய் யார்? பெண் குழந்தை என்பதால் வீசி சென்றாரா? அல்லது தகாத உறவினால் பிறந்த குழந்தையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி பதவிக்கு 51 பேர் மனுத்தாக்கல்
செய்யாறில் பட்டப்பகலில் துணிகரம் வீட்டில் பீரோ உடைத்து 10 சவரன் நகை திருட்டு
கலசபாக்கம் அருகே வெங்காயத்தில் வேர்புழு தாக்குதல் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு
வந்தவாசி அருகே மயங்கி விழுந்து பஸ் கண்டக்டர் சாவு
செங்கம், புதுப்பாளையம் ஒன்றியத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வேட்புமனு தாக்கல் செய்வதில் இடையூறு
பெரணமல்லூரில் பரபரப்பு அரசு பஸ் வராததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்