குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் கலெக்டர் தகவல்
7/16/2019 12:03:54 AM
நாகர்கோவில், ஜூலை 16: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே விடுத்துள்ள செய்திகுறிப்பு: தற்போது தேங்காய் கொப்பரை விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலை ஆதரவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 621 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றிலிருந்து 47 லட்சத்து 64 தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. தேங்காய் விலை குறையும் போது விவசாயிகள் அவற்றை மதிப்பு கூட்டி கொப்பரையாக விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலங்களாக, தேங்காய் கொப்பரை விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருந்து வருகின்றது. விலை ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, கொப்பரைக்கு நல்லவிலை கிடைக்கும் பொருட்டு கன்னியாகுமரி, நெல்லை உள்பட 20 மாவட்டங்களில் 50 ஆயிரம் டன் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.
மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள தென்னை விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரையை எளிதில் கொள்முதல் செய்வதற்காக, தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் மூலம் 28 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை முனையத்தின் மூலம் 43 இடங்களிலும் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படும். பந்து கொப்பரை மற்றும் அரவை கொப்பரை என இரண்டு வகைகளாக தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். மத்திய அரசினால் 2019ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரைக்கு கிலோ ஒன்றிற்கு ₹99.20 மற்றும் அரவைக் கொப்பரைக்கு ₹95.21 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் பணி, அடுத்த 6 மாதங்கள் நடைபெறும். 5 ஆயிரம் டன் பந்து கொப்பரையும், 45 ஆயிரம் டன் அரவைக் கொப்பரையும் கொள்முதல் செய்திட அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்யலாம். பெயர்களை பதிவு செய்யும்போது, நிலச்சிட்டா, அடங்கல், அதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான ‘நாபெட்’ நிறுவனம் பரிந்துரைக்கும் குறைந்தபட்ச தரத்தில் கொப்பரை இருத்தல் அவசியமாகும். விவசாயிகள் இத்தரத்தினை உறுதிசெய்து குறைந்தபட்ச ஆதாரவிலை பெற்றிடலாம். சேமிப்புக் கிடங்குகளில் கொப்பரைக் குவியல்கள் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குள் அதற்குரிய தொகை வழங்கப்படும்.
மேலும் செய்திகள்
தக்கலையில் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்த 18 குரங்குகள் சிக்கின
குண்டு குழிகளாக மாறிய ஆற்றூர் - குட்டக்குழி சாலை சீரமைக்க 50 லட்சத்தில் திட்ட மதிப்பீடு
கால் தடங்களை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு நாகர்கோவிலில் புலி நடமாட்டம்? காட்டுப்பூனை என மாவட்ட வன அலுவலர் தகவல்
குழித்துறையில் மினி பஸ் மோதி படுகாயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பு
மீனாட்சிபுரத்தில் ஆக்ரமிப்பு கோயில் இடிப்பு
கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை