SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்தரிப்புலத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை

7/12/2019 12:02:17 AM

வேதாரண்யம், ஜூலை 12: வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலத்தில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்க மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.வேதாரண்யம் தாலுகாவில் வாய்மேடு வேதாரண்யம் வேட்டைக்காரனிருப்பு ஆகிய மூன்று இடங்களில் துணை மின்நிலையங்கள் உள்ளன. கடந்த ஆண்டு 33 கிலோ வாட்டாக இருந்த வாய்மேடு துணை மின்நிலையம் 110 கிலோ வாட்டாக மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது 33 கிலோ வாட்டாக உள்ள வேதாரண்யம் துணை மின்நிலையம் 110 கிலோ வாட் துணை மின் நிலையமாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கத்தரிப்புலத்தில் குறைந்த மின்அழுத்தத்தை போக்கவும் சீராக மின்சாரம் கிடைக்க வேண்டியும் அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 33 கிலோ வாட்டில் துணை மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது.ஆனால் இதுவரை துணை மின்நிலையம் அமைப்பதற்கான எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனே துணை மின்நிலையம் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதேபோல் கள்ளிமேட்டிலும் ஒரு துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் எனவும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ilavarsar_pakisthn111

    பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

  • kavan_manavai11

    அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

  • seuol_expooo1

    தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

  • pumbkin_comp111

    அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்