SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் குடிமராமத்து திட்டப்பணிகள் குறித்து விவசாயிகளுடன் கலெக்டர் கலந்தாய்வு

7/12/2019 12:02:10 AM

நாகை, ஜூலை12: பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் நாகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள குடிமராமத்து திட்டப்பணிகள் குறித்து விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் மற்றும் குடிமராமத்துப் பணிகள் சிறப்பு அலுவலர் பாலாஜி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1829 பணிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நாகை மாவட்டத்திற்கு 82 பணிகள் ரூ.1659.65 லட்சம் மதிப்பில் முடிக்கப்படவுள்ளது. ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் ஆகியவை தூர்வாரப்படும். பழுதடைந்த கட்டுமானங்கள் புதுப்பிக்கப்படும். அடைப்பு பலகைகள் புதுப்பிக்கப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளை பயன்படுத்தும் விவசாயிகள் 50 சதவீதத்திற்கு மேலாக உள்ள உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்படும் சங்கங்கள் மூலமாக செயல்படுத்தப்படும். பணியின் மொத்த மதிப்பீட்டில் 90 சதவீதம் அரசு நிதியும், 10 சதவீதம் விவசாயிகள் பங்களிப்பாகவும் இருக்க வேண்டும். எனவே விசாயிகள் பாசன சங்கங்கள் வாயிலாக இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றார். கஜா மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு கூடுதல் திட்ட இயக்குநர் பிரதீப்குமார், டிஆர்ஓ இந்துமதி, சப் கலெக்டர் கமல்கிஷோர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைச்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ilavarsar_pakisthn111

    பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

  • kavan_manavai11

    அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

  • seuol_expooo1

    தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

  • pumbkin_comp111

    அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்