SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விரைவில் திறக்க கோரிக்கை 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7/12/2019 12:01:59 AM

காரைக்கால், ஜூலை 12: அங்கன்வாடி ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் அங்கன்வாடி ஊழியர்களின் அகில இந்திய கோரிக்கை தினத்தை அனுசரிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகளுக்கு அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்கும் முகமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்தியில் ஆளுகின்ற மோடி தலைமையிலான மத்திய அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி அளவை குறைத்து வருகிறது. நிதி அளவு குறைக்கப்படுவதால் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. ஆகவே மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி அளவை குறைக்காமல் அதிகப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும், காலியாகவுள்ள நிரந்தர அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் பதவிகளில் 3 ஆண்டுகள் பணிமுடித்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் மாத இறுதியில் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை புதுச்சேரி அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே அகில இந்திய கோரிக்கை தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்க தலைவர் முத்துலெட்சுமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக சங்க செயலாளர் பாகிரதி வரவேற்றார். முடிவில் பொருளாளர் வாணி நன்றி கூறினார்.சம்மேளன அலுவலக செயலாளர் புகழேந்தி, பி.ஆர்.டி.சி ஊழியர் சங்க பொறுப்பாளர் சுப்புராஜ், வேளாண் துறை ஊழியர் சங்க தனசேகரன் ஆகியோர் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் சங்க சங்க திட்ட செயலாளர் மல்லிகா, துணை தலைவிகள் இசபெல்லா, ராஜலெட்சுமி, மெஹர்பானு, துணை செயலாளர் சசிரேகா உட்பட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ilavarsar_pakisthn111

    பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

  • kavan_manavai11

    அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

  • seuol_expooo1

    தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

  • pumbkin_comp111

    அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்