SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாடாலூர் அருகே கார் மீது லாரி மோதல் பெண் பலி: 2 பேர் காயம்

7/10/2019 12:23:44 AM

பாடாலூர், ஜூலை10: பாடாலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து வந்த கார் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் வெளிநாட்டிலிருந்து வந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். 2 பேர் காயம் அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பட்டக்கா வயல் கிராமத்தைச் சேர்ந்த முகமது உசேன் மனைவி சம்சீனீசா (42). இவரது உறவினர் முஜாகிதீன் (20) .இவர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.இருவரையும் சென்னையிலிருந்து அழைத்து வருவதற்காக அவரது உறவினர் சாகுல் அமீது, தவ்ஹீத் ஆகியோர் சொந்தகிராமத்தில் இருந்து சென்னை சென்று இருவரையும் காரில் அழைத்துக் கொண்டு வந்தனர். காரை அதே பகுதியை சேர்ந்த சேதுராமன் மகன் அருண்குமார் (22) ஓட்டி வந்தார். கார் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே பூமலை என்ற இடத்தில் வந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி காரின் மீது மோதியது. இதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்சீனீசா சம்பவ இடத்திலேயே இறந்தார். சாகுல் அமீது, முஜாகிதீன் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்பொதுமக்கள் செல்ல தடை...மேலும், மருவத்தூர்  எஸ்ஐ ராம்குமார், சம்மந்தப்பட்ட குவாரி உரி மையாளரை அழைத்து, டெட்டனேட்டர்களை செயலிழக்கச் செய்யும்வரை அப்பகுதி யில் பொதுமக்கள் யார்சென்றாலும் வெடித்துவிடும் அபாயம் உள்ளதால், அந்தகுவாரி யில் 92டெட்டனேட்டர்கள் பதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதித்து எச்சரிக்கைப் பலகை வைக்கும்படி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்